ஆன்மிகம்

மாங்கல்ய பலம் தரும் ஸ்ரீகமலாம்பிகா அஷ்டகம்

Published On 2016-09-24 02:30 GMT   |   Update On 2016-09-24 02:30 GMT
கமலாம்பிகை அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் கிட்டாதது எதுவும் இல்லை என்பது பெரியவர்களின் நம்பிக்கை.
கமலாம்பிகை அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் கிட்டாதது எதுவும் இல்லை என்பது பெரியவர்களின் நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கீழ்காணும் அஷ்டகத்தைப் பாராயணம் செய்து, அம்பிகை அருளால் அனைத்து நலன்களும் பெறுவோம். 

பந்தூகத்யுதிமிந்து பிம்ப வதனாம் 
ப்ருந்தாரகைர்வந்திதாம் 
மந்தாராதி ஸமர்சிதாம் மதுமதீம் 
மந்தஸ்மிதாம் ஸுந்தரீம் 
பந்தச்சேதன காரிணீம் த்ரிநயனாம் 
போகாபவர்கப்ரதாம் 
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம் 
வாஞ்சானுகூலாம் ஸிவாம் 

பொருள் :

செம்பருத்தி மலர் போன்ற செவ்வொளி பூண்டவளே, ஒளிமிகு சந்திரன் போன்ற முகம் கொண்டவளே, தேவர்களால் வணங்கப்பட்டவளே, மந்தாரம் முதலான மலர்களால் பூஜிக்கப்பட்டவளே, மனதிற்கு எப்போதும் சந்தோஷம் அளிப்பவளே, நிலைத்த புன்சிரிப்புடன் திகழ்பவளே, 

அழகின் இலக்கணமே, கர்மபந்தத்தை போக்குகிறவளே, முக்கண்களை உடையவளே, இவ்வுலகில் எல்லா சுகங்களையும் அளித்து, நிரந்தர சந்தோஷமான மோட்சத்தையும் அளிப்பவளே, பக்தர் விரும்பியனவெல்லாம் நிறைவேற்றித் தருபவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

Similar News