ஆன்மிகம்

வளமான வாழ்க்கை அமைய லட்சுமி நரசிம்ம ஸ்லோகம்

Published On 2016-09-13 06:03 GMT   |   Update On 2016-09-13 06:03 GMT
ஆதிசங்கரர் இயற்றிய லட்சுமி நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் நாம் எதிரிகள் பகை நீங்கி, நிம்மதியான, வளமான வாழ்க்கை அமையப் பெறுவோம்.
ஆதிசங்கரர் இயற்றிய லட்சுமி நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் நாம் எதிரிகள் பகை நீங்கி, நிம்மதியான, வளமான வாழ்க்கை அமையப் பெறுவோம்.

மத் பயோநித நிகேதன சக்ரபாணே
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

பொதுப் பொருள்:  திவ்யமான பாற்கடலில் பள்ளி கொண்ட சக்ரபாணியே! ஆதிசேஷனின் உடல் ஒளிபொருந்திய மணிகளாக ஒளிர அந்த ஒளியின் நிறத்தை மேற்கொண்ட பேரழகுத் திருமேனி கொண்டவரே, கனிந்த முனிவர்களுக்கும், அடைக்கலம் என்று உமை அடைந்த பக்தருக்கும் நிரந்தர சரணாகதி அளிக்க வல்லவர் நீரே அல்லவா! வாழ்க்கை எனும் பெருங்கடலைக் கடக்க பாதுகாப்பான படகாக அருள்புரியும் லக்ஷ்மி நரசிம்மனே, என் கரம் பற்றி தூக்கிவிட்டு அருள வேண்டும்.

Similar News