ஆன்மிகம்

காசி, கயா தரிசன பலன் கிட்டும் ஸ்லோகம்

Published On 2016-05-23 07:22 IST   |   Update On 2016-05-23 07:22:00 IST
பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று ஆயுள் பருவங்களை அளிப்பதும் மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம்.
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞ்ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவ தர்சனம் கயாப்ரயாகேத்வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம்

பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று ஆயுள் பருவங்களை அளிப்பதும் மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம். இந்த வில்வத்தை பரமேஸ்வரா, உமக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.

காசி என்ற மகா புண்ணிய தலத்தில் வசித்தல், அங்குள்ள காலபைரவரை தரிசித்தல், கயை, பிரயாகை போன்ற தலங்களுக்கு சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ இலையை ஈசனுக்கு அர்ப்பணிப்பதால், உன்னைச் சேரும்.      

Similar News