ஆன்மிகம்
ஆஞ்சநேயர்

மூல நட்சத்திர நாளில் ஆஞ்சநேயரை விரதம் இருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்

Published On 2021-06-28 05:43 GMT   |   Update On 2021-06-28 05:43 GMT
அனுமனுக்கு உகந்த மூல நட்சத்திர தினத்தில், அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். உங்களின் எல்லாக் காரியங்களிலும் பக்கபலமாக இருந்து காத்தருள்வார் ராமபக்தன்.
மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தியோ வெற்றிலை மாலை அணிவித்தோ துளசி மாலை வழங்கியோ வழிபடுங்கள். உங்கள் எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார் அனுமன். என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அனுமனுக்கு உகந்த நட்சத்திரம் மூலம். அவரின் ஜன்ம நட்சத்திரம் இது. மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திர நாளில் விரதம் இருந்து அனுமனை வழிபடுவது ரொம்பவே சிறப்பானது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வணங்கி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அதேபோல் அவருக்கு உரிய மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமன் கோயிலுக்குச் சென்று அவரை வழிபட்டால், எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார். இன்னல்கள் மொத்தமும் விலகிவிடும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.

நாமக்கல், சென்னை நங்கநல்லூர், திருச்சி கல்லுக்குழி, நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் ஆலயங்களில் மூல நட்சத்திர சிறப்பு வழிபாடு, விசேஷ அலங்காரங்கள், பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.

அனுமனுக்கு உகந்த மூல நட்சத்திர தினத்தில், அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். வெற்றிலை மாலை கட்டி எடுத்துச் சென்று வழங்குங்கள். கொஞ்சம் வெண்ணெய் வழங்கி சார்த்துங்கள். அப்படியே இயலாதோருக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் அன்னதானமாக வழங்குங்கள். உங்களின் எல்லாக் காரியங்களிலும் பக்கபலமாக இருந்து காத்தருள்வார் ராமபக்தன்.
Tags:    

Similar News