ஆன்மிகம்
பெருமாள்

இன்று வாழ்வை வளமாக்கும் ஆனி மாத வளர்பிறை ஏகாதசி விரதம்

Published On 2021-06-21 01:25 GMT   |   Update On 2021-06-22 01:54 GMT
ஆனி மாத வளர்பிறை ஏகாதசி தினத்தில் எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி  பெருமாள் வழிபாட்டிற்கான சிறப்புமிக்க தினங்களாக கருதப்படுகின்றன. ஒரு வருட காலத்தில் வருகின்ற மற்ற ஏகாதசி தினங்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஆனி மாத ஏகாதசி  விரதம் அனுஷ்டிப்பதால் வாழ்வில் உயரிய நிலையை அடையலாம். இந்த ஏகாதசி திதியில் நீர் கூட அருந்தாமல் உபவாசம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுபவர்கள், அவர்கள் மறைந்த பிறகு மோட்ச நிலை உறுதியாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீர் அருந்தாமல் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி  விரதம் மேற்கொள்வதால் இந்த ஆனி வளர்பிறை
ஏகாதசி
நிர்ஜல ஏகாதசி எனவும் அழைக்கின்றனர்.

இன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நல்ல திடகாத்திரமான உடல்நிலை கொண்டவர்கள் நீர் கூட அருந்தாமல் நிர்ஜல ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது விரும்பிய பலனை தரவல்லதாகும்.

நிர்ஜல ஏகாதசி தினத்தன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்க நாணயங்களை தானம் செய்த புண்ணியப் பலன்களை பெறுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளன. நிர்ஜல ஏகாதசியின் பெருமையை கேட்பவர்கள் கூட இறப்பிற்குப் பின் பெருமாள் அருளும் வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News