ஆன்மிகம்
புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள்

புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள்

Published On 2019-09-19 07:58 GMT   |   Update On 2019-09-19 07:58 GMT
விரதங்கள் அதிகம் அனுஷ்டிக்கப்படும் மாதம் புரட்டாசிதான். இந்த மாதத்தில் எந்த விரதங்கள் கடைபிடிக்கப்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.
சிவனும் விஷ்ணுவும் இணைந்து அருள்புரியும் ஆலயங்கள் மிக குறைவாக தான் இருக்கும். ஆனால் அவை மிகவும் விசேஷமானவை. சைவர்களாக இருக்கட்டும் வைணவர்களாக இருக்கட்டும்... இரு தரப்பினரும் சேர்ந்து கொண்டாடுவது இந்த புரட்டாசி மாதம் தான்.

அம்பாள்களுக்கு பிடித்த நவராத்திரி தொடங்கும் மாதமும் இதுவே. கேதார கவுரி விரத ஆரம்பம், சித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், மகாலட்சுமி விரதம், அமுக்தாபரண விரதம், ஜேஷ்டா விரதம், சஷ்டி - லலிதா விரதம், கபிலா சஷ்டி விரதம், மகாளய பட்ச ஆரம்பம் என விரதங்கள் அதிகம் அனுஷ்டிக்கப்படும் மாதமும் புரட்டாசிதான்.
Tags:    

Similar News