ஆன்மிகம்

சாய்பாபாவின் அருள் கிடைக்கும் துனி விரத பூஜை

Published On 2018-09-17 02:24 GMT   |   Update On 2018-09-17 02:24 GMT
சாய்பாபாவுக்கு உகந்த இந்த விரதத்தை 9 வாரங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும். இந்த விரதம் கடைபிடிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். அதாவது தன்னிடமிருந்த சட்கா எனும் குச்சியால் பாபா உருவாக்கிய அணையா துனி நெருப்பை 21, 48, 54 அல்லது 108 முறை என அவரவர் சௌகரியம் போல் செய்யலாம்.

பூஜையறையை துடைத்து கோலம் போட்டு மஞ்சள் துணியை பலகையில் விரித்து பாபா படத்தை அதன்மீது வைத்து ஊதுவத்தி ஏற்றி, ஒரு மட்டைத் தேங்காயை வைத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவர் முன் வைக்க வேண்டும். ‘புக்கே’ எனும் (தேங்காய் துருவல், அவல், சர்க்கரை) கலந்த இனிப்பை நிவேதிக்க வேண்டும்.

9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில் போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும்.

மேற்காணும் வழிபாட்டு முறைகளில் அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை செய்து சகல வளங்களும் பெறலாம். நாம் தினமும் பார்த்து அதன்படி திட்டமிட உதவும் காலண்டர் வேறு; பாபா வைத்திருக்கும் காலண்டர் வேறு.

நம் பிரார்த்தனைகள் நம் காலண்டர்படி இன்ன தேதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்காமல் அவர் மீது நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டும். ஏனென்றால் நமக்கு எதை எப்போது தரவேண்டும் என்பதை அவர் தன் காலண்டர்படி தீர்மானித்து அப்படித்தான் நமக்கு அருள்வார்.
Tags:    

Similar News