ஆன்மிகம்
காரைக்காலில் கந்தூரி விழாவையொட்டி சந்தன கூடு ஊர்வலம்

காரைக்காலில் கந்தூரி விழாவையொட்டி சந்தன கூடு ஊர்வலம்

Published On 2021-04-03 11:27 IST   |   Update On 2021-04-03 11:27:00 IST
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள இந்தியா வந்தார். இந்தியாவில், திருச்சி, நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றி வந்தார். காரைக்காலில் தங்கி இருந்தபோது, அவர் இயற்கை எய்தினார். அவரது நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. தர்காவில் இருந்து இரவு 11 மணிக்கு சந்தன கூடு ஊர்வலம் தொடங்கியது. காரைக்காலின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய விடிய சென்று நேற்று அதிகாலை பள்ளிவாசலை சென்றடைந்தது. விழாவில் ஏராளமான இஸ்லாமியர்களுடன், இந்து, கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்டனர்.

Similar News