ஆன்மிகம்
நவகிரக தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய கோவில்

நவகிரக தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய கோவில்

Published On 2021-05-29 08:36 GMT   |   Update On 2021-05-29 08:36 GMT
அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில் கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது.
அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில் கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகள் உள்ளன.

இத்தலத்தில் இறைவன் பாதாளேசுவரர் என்ற திருப்பெயரிலும், அம்மை அலங்காரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் உச்சிக்கால (காலை 11 முதல் 12.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் வன்னி வனம் ஆகும். திருமால் மற்றும் பிரம்மாவுக்கு இடையில் யார் பெரியவர் என்ற போட்டியில் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை தோண்டி சிவனின் திருவடியை காணமுற்பட்டார்.

அவ்வாறு வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது. அரி என்னும் திருமால் பூமியை துவாரம் இட்ட இடம் ஆதலால் இவ்விடம் அரித்துவார மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக திகழ்வதால் இத்தலத்தில் நவகிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. இத்தல இறைவனை வழிபட நவகிரக தோஷங்கள் நீங்கும். கடன் தொல்லை ஒழியும்.
Tags:    

Similar News