ஆன்மிகம்
ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள்

மாங்கல்யம் கூடி வர வழிபட வேண்டிய கோவில்

Published On 2021-04-07 09:00 GMT   |   Update On 2021-04-07 09:00 GMT
1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவிலில் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது இக்கோவிலின் சிறப்பம்சம்.
சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இப்பகுதியில் அமைந்துள்ள பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துள்ளனர். நாளைடைவில் குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து 'குஜிலியம்பாறை' என இவ்வூர் அழைக்கப்பட்டது. குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.

திருமணக்கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும். தனி சன்னதியிலுள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் வறுமை நீங்கி பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி ஏற்படும். இங்குள்ள விஷ்ணு, துர்க்கையை வணங்கினால் பாவங்கள் அகன்று தோ ஷங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாசலில் உள்ள ஆஞ்சநேயரை வடை மாலை, துளசி மாலை, நெய்வேத்யம் செய்து வழிபட்டால் எக்காரியமும் வெற்றியடையும். இங்கு வேதநாயகனாக விளங்கும் பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து பூஜித்தால் நாகதோஷம், பட்சி தோஷம் விலகி சுகம் உண்டாகும்.

இந்த கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Tags:    

Similar News