ஆன்மிகம்
நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் பிரசித்தி பெற்ற கல்கருட பகவான்.

சீனிவாச பெருமாள் கோவில் கருடனை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும் விலகும்

Published On 2021-03-30 09:36 IST   |   Update On 2021-03-30 09:36:00 IST
சீனிவாச பெருமாள் கோவில் கருடனை தரிசனத்தால் எல்லாவிதமான தோஷங்களும் மறையும். ஒரு மண்டலம் எம்பெருமானை சுற்றி வந்து வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில்.

கோவில் மூலஸ்தானத்தின் கீழே மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ளது உள்ளே பக்ஷிராஜன் கருடன். பெரிய திருவடி, அரசு மங்களாலயன் என்றெல்லாம் புனித பெயர் கொண்டு அழைக்கப்படும் கருடன், சாளக்கிராம சிலை வடிவில் வாகன அமைப்பில் நீர் சுரக்கும் நீர் முடியும் நீண்டு வளர்ந்து திருமேனியும் கொண்டு பெருந்தோள் உடனும், மிகவும் வீரத்துடனும், எடுப்புடன் கூடிய தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளார். தம்மை விரும்பித் தொழும் அடியார்கள் வேண்டியன எல்லாம் அருளும் தெய்வமாக விளங்குகிறார். பெருமாளுக்கு நாள்தோறும் திருவாராதனம் கண்டவுடன் அவர் அமுதுபடி செய்ததை இவருக்கும் நித்தம் ஆறு வேளை ஆராதனம் செய்து வருகிறார்கள். இவருக்கு அமுதகலசம் என்ற மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் விருப்பம். அதனால் இவரை மோதகாமோதர் எனவும் அழைப்பதுண்டு. இவரிடம் வேண்டிக் கொள்ளும் விருப்பம் எல்லாம் உடனுக்குடன் நிறைவேறும் அதிசயத்தையும் காணலாம். இவரது சர்வாங்கங்களில் புஷ்ப அங்கி அணிவிப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் சட்டென நிறைவேறுகின்றன. மார்கழி பெரும் திருவிழாவில் நான்காம் திருநாளும் மற்றொன்று பங்குனிப் பெருவிழாவில் நான்காம் திருநாளும் ஆகும்.

வியாழன் மாலையிலும், சனி காலையிலும் கருட பகவான் வழிபாடு மிகவும் சிறப்பு என்பார்கள். இந்த கருடனுக்கு கஸ்தூரி குங்குமப்பூ, புனுகு சட்டம் முதலியவைகளை வாழை சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர், இஷ்ட சித்திகளையும் நிச்சயம் பெறுவர். இவரது நட்சத்திரம் சுவாதி ஆனதால் அன்று கருடனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது. இவரது தரிசனத்தால் எல்லாவிதமான தோஷங்களும் மறையும். ஒரு மண்டலம் எம்பெருமானை சுற்றி வந்து வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும். ஸ்ரீசுதர்சன மனதிற்கு அதிர்ஷ்டான கடவுளானபடியால் எல்லாவிதமான மன நோய்களும் நீங்கும்.

Similar News