ஆன்மிகம்

பதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை

Published On 2018-10-01 06:22 GMT   |   Update On 2018-10-01 06:22 GMT
திருச்சி அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் உள்ள ஞீலிவனேஸ்வரர் கோவிலில் பதவி உயர்வு கிடைக்க, திருமண தடை நீங்க, ஆயுள் நீடிக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம்.
திருச்சி அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் ஞீலிவனேஸ்வரர் கோயில் உள்ளது. ஞீலி என்பது ஒரு வகை கல்வாழை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை. பசுமையான ஞீலி வாழையை தல விருட்சமாக பெற்றதால் திருப்பபைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது.

இக்கோயிலில் இரு அம்மன் சன்னதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள்செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்குப் பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும்.

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப்பரிகார பூஜை நேரம் காலை 8.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலையில் 4.30 முதல் 5.30 வரையும் நடத்தப்படும். இழந்த பணிவாய்ப்புகள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, திருமண தடை நீங்க, ஆயுள் நீடிக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். எமன் சன்னதியில் ஆயுள் ஹோமங்கள் செய்கிறார்கள்.
Tags:    

Similar News