ஆன்மிகம்

திருமண தடை நீக்கும் பஞ்சநதீஸ்வரர்

Published On 2018-09-05 06:24 GMT   |   Update On 2018-09-05 06:24 GMT
பஞ்சநதீஸ்வரர் கோவில் கால பைரவருக்கு 11 வாரம் முறைப்படி சகஸ்ரநாம வழிபாடும், விஷ்ணு துர்க்கைக்கு 11 வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வழிபாடும் செய்தால் திருமண தடை அகலும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில், புராதன சிறப்பு வாய்ந்த ஆலயமாக விளங்குகின்றன பஞ்சநதீஸ்வரர் கோவில். இத்தல கால பைரவருக்கு 11 வாரம் முறைப்படி சகஸ்ரநாம வழிபாடும், விஷ்ணு துர்க்கைக்கு 11 வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வழிபாடும் செய்தால் ராகு- கேது தோஷங்கள் அகலும். மேலும் திருமண தடை நீங்கும். மனதில் சஞ்சலங்கள் மறையும். மன பயம் விலகும், திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தல கல்யாண விநாயகரை வழிபட்டு வருவதாலும், ஆண்டுதோறும் திருவாதிரை விழாவில் நடக்கும் சிவன்- அம்பாள் திருக்கல்யாணத்தின் போதும் பிரார்த்தனை செய்பவர்களுக்கும் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடந்தேறுகிறது. அப்படி வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அடுத்த ஆண்டு புதுமணத் தம்பதிகளாக ஆலயத்திற்கு வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்திச் செல்கிறார்கள். 
Tags:    

Similar News