ஆன்மிகம்

திசைக்கு ஏற்ற தெய்வ வழிபாட்டு பரிகாரம்

Published On 2018-05-14 05:10 GMT   |   Update On 2018-05-14 05:10 GMT
திசைக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற இயலும். எந்த திசை நடப்பவர்கள் எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
அனைத்து திசை நடப்பவர்களும் முதலில் ஆனைமுகனை வழிபட வேண்டும். அதன்பிறகு...

சூரியதிசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

சந்திரதிசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மைதரும்.

செவ்வாய் திசை நடப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவது முன்னேற்றம் தரும்.

புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.

வியாழதிசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்திதரும்.

சுக்ரதிசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.

சனிதிசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு தடைகளை அகற்றும்.

ராகுதிசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேதுதிசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபட்டு வரவும்.

இவை நீங்கலாக செவ்வாய்திசை சனிபுத்தி நடப்பவர்களும், வியாழதிசை சுக்ரபுத்தி நடப்பவர்களும் இதுபோல பகை கிரக திசாபுத்தி ஆதிக்கம் நடை பெறும் பொழுது, வைரவர் வழிபாடு, வராஹி வழிபாடு, பிரதோஷ வழிபாடுகள் நன்மையைத் தரும்.

மேற்கண்டவாறு திசைக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற இயலும். 
Tags:    

Similar News