உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகர்கோவில் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-12-25 11:42 IST   |   Update On 2021-12-25 11:42:00 IST
ந்த திருவிழா வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல் நகரில் திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலஞ்சி பங்குத்தந்தை மரிய சூசை வின்சென்ட் கொடியேற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து அகத்திய முனி குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தேவசகாயம் மவுண்ட் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் மறையுரை நிகழ்த்தினார்.

விழாவை பங்கு நிர்வாகிகள் சிறப்பித்தனர். இதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் நிகழ்வுகளை இளைஞர் இயக்கத்தினர் சிறப்பித்தார்கள். இந்த திருவிழா வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கார்மல் நகர் பங்குத்தந்தை சகாய பிரபு, பங்கு தலைவர் ஜோசப் ஆன்றனி, செயலாளர் டூறிங் ஆன்றனி தனிஸ், பொருளாளர் லியோன் ஜேசு ரத்தினம் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.

Similar News