ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மறவபட்டி புதூர் புனித சலேத் மாதா ஆலய திருவிழா

மறவபட்டி புதூர் புனித சலேத் மாதா ஆலய திருவிழா

Published On 2022-05-24 04:57 GMT   |   Update On 2022-05-24 04:57 GMT
ஆலயத்திற்கு வந்த சப்பரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் இட்டு சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தாடிக்கொம்புவை அடுத்த மறவபட்டி புதூரில் பழமையான புனித சலேத் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 137-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. கடந்த 13-ந்தேதி நவநாள் நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி ஊர்வலமும், திருப்பலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

21-ந்தேதி புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருவிழாவில் புதுநன்மை திருப்பலி மறவபட்டி பங்குத்தந்தை லியோ ஜோசப் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் மின்ரத பவனி நடைபெற்றது.

இதையடுத்து நேற்று நடந்த பகல் திருவிழாவில் புனித சலேத் மாதாவின் பெரிய சப்பர பவனி நடைபெற்றது. முடிவில் ஆலயத்திற்கு வந்த சப்பரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் இட்டு சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பெரிய தனக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News