வழிபாடு
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் புஷ்ப பல்லக்கு வீதியுலா

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 9-ந்தேதி தேரோட்டம்

Update: 2022-06-04 08:14 GMT
திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது.
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது. விழாவில் கோவில் அறக்கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் வருகிற 7-ந் தேதி பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா, 9-ந் தேதி தேரோட்டம், 10-ந் தேதி சனீஸ்வரர் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா, 11-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News