ஆன்மிகம்
புதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் திறப்பு விழா

புதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் திறப்பு விழா

Published On 2020-10-19 07:42 GMT   |   Update On 2020-10-19 07:42 GMT
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோணியார் ஆலயம் போதிய இடவசதி இன்றி இருந்ததால் சுமார் ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது.

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோணியார் ஆலயம் போதிய இடவசதி இன்றி இருந்ததால் இந்த ஆலயத்தை புதுப்பித்து விரிவுபடுத்த ஜஸ்டின் திரவியம், சார்லஸ், மணி, அருள்பிரகாசம், பங்குராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

பழைய ஆலயம் அப்புறப்படுத்தப்பட்டு சுமார் ரூ.30 லட்சம் செலவில் ஒரே ஆண்டில் புதிதாக ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலய திறப்பு விழா நடைபெற்றது. முதன்மை குரு ஜெயராஜ், பங்கு தந்தைகள் எட்வர்டு பிரான்சிஸ் சேவியர், பால் பிரிட்டோ, உதவி பங்குத்தந்தை குரூஸ் ஆகியோர் முன்னிலையில் மதுரை உயர்மறை மாவட்ட ஆயர் அந்தோணி பாப்புசாமி விரிவாக்கப்பட்ட புதிய அந்தோணியார் ஆலயத்தை திறந்து வைத்து ஆசி வழங்கினார்.

அதன்பின்னர் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் பவன் முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரங்கராஜன், கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, கணேசன், வக்கீல் முருகன், திருமுருகன், காமேஸ்வரன் உள்பட இப்பகுதி கிறிஸ்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News