ஆன்மிகம்

கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய குடும்பவிழா நாளை தொடங்குகிறது

Published On 2017-11-16 09:15 IST   |   Update On 2017-11-16 09:15:00 IST
கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய குடும்ப விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
கிறிஸ்துநகர் (நாகர்கோவில்) கிறிஸ்து அரசர் ஆலய குடும்ப விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதனையொட்டி நாளை மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 7 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, திருப்பலி ஆகியவை நடக்கிறது.

23-ந் தேதி மாலை குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் திருப்பலி, 24-ந் தேதி மாலை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் திருப்பலி நடக்கிறது.

25-ந் தேதி காலை 5.45 மணிக்கு ஜெபமாலை, 10 மணிக்கு நோயாளிகள் திருப்பலி, மாலை 5.45 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, அதை தொடர்ந்து கிறிஸ்து அரசர் தேர்பவனி நடைபெறுகிறது.

26-ந் தேதி காலை 7.30 மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமையில் கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலி, மாலை நன்றி திருப்பலி, கொடியிறக்கமும், தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் ஆனந்த், இணை பங்குத்தந்தை லியோ ஜஸ்டின், மூத்த குருக்கள், அருட்சகோதரிகள், பங்குபேரவை, பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

Similar News