ஆன்மிகம்
பாந்திரா மலை மாதா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
மும்பை பாந்திராவில் பிரசித்தி பெற்ற பாந்திரா மலை மாதா ஆலய திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ந்து 8 நாட்கள் தொடங்குகிறது.
மும்பை பாந்திராவில் பிரசித்தி பெற்ற மலை மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா ஆண்டு தோறும் செப்டம்பர் 8-ந்தேதிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும். பாந்திரா மலை மாதா திருவிழாவிற்கு மும்பை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து மாதாவிடம் பிரார்த்தனை செய்வார்கள்.
குறிப்பாக தமிழர்கள் அதிகளவு வருகை தருவார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. 17-ந்தேதி சிறப்பு திருப்பலியுடன் திருவிழா முடிவடைகிறது.
திருவிழா தொடக்க நாளையொட்டி நாளை அதிகாலை 5.30 மணி முதல் ஆங்கிலத்தில் தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்படும். காலை 11.30 மணிக்கு திருவிழா தொடக்கநாள் சிறப்பு திருப்பலி நடைபெறும். மாலை நேரத்தில் திருப்பலி எதுவும் நடைபெறாது.
11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.45 மணிக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்களுக்கான திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 12-ந்தேதி காலை 11.30 மணிக்கு கொங்கனியிலும், 13-ந்தேதி மராத்தியிலும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 14-ந்தேதி காலை 11.30 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும்.
15-ந்தேதி மலையாளத்திலும், 16-ந்தேதி குஜராத்தி மொழியிலும் காலை 11.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 17-ந்தேதி காலை 11.30 மணிக்கு திருவிழா நிறைவு நாள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
திருவிழாவையொட்டி பொதுமக்கள் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11 மணிவரை ஆலயத்தில் பிரார்த்தனை செய்யலாம். திருவிழா நடைபெறும் 8 நாட்களும் பாந்திரா ரெயில்நிலையம் மேற்கு பகுதியில் இருந்து ஆலயம் அமைந்துள்ள ஹில்ரோடு பகுதிக்கு தினந்தோறும் 222 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில் 98 பஸ்கள் காலையிலும், 124 பஸ்கள் மதியத்திற்கு பிறகும் இயக்கப்படுகின்றன.