ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியா பிறப்பு பெருவிழா தொடங்கியது
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் தஞ்சை மாவட்டம் பூண்டியில் உள்ள மாதா பேராலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மரியாவின் பிறப்பு பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக பூண்டி மாதா பேராலயத்தின் முகப்பில் இருந்து அன்னையின் சிறிய சொரூபம் வைக்கப்பட்ட சிறு தேரை பக்தர்கள் சுமந்து வந்தனர். அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியுடன் ஜெபமாலை பாடல்களுடன் கொடி ஊர்வலம் பேராலயத்தினை சுற்றி வந்தது. கொடி ஊர்வலம் கொடிமேடைக்கு வந்தடைந்ததும் அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது.
கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமி முன்னிலையில் உதகை மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து மரியா-நற்கருணை பேழை என்ற பொருளில் சிறப்பு திருப்பலி உதகை பிஷப் அமல்ராஜ் தலைமையில் நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள்அமலதாஸ், எடிசன்ராஜ் மற்றும் பல்வேறு ஆலய பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேராலயத்தின் நுழைவு பகுதியில் பூண்டிமாதா உருவத்துடன் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை உதகை பிஷப் அமல்ராஜ், குடந்தை பிஷப் அந்தோணிசாமி ஆகியோர் இணைந்து புனிதம் செய்து திறந்து வைத்தனர். விழா நாட்களில் தினமும் மாலை சிறு தேர்பவனி நடைபெறும். அன்னைமரியாவின் பிறந்த நாள் கொண்டாடப்படும் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு மரியா- விடியற்காலத்தின் நட்சத்திரம் என்ற பொருளில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி திருப்பலி நிறைவேற்றி இரவு 9.30 மணியளவில் அன்னையின் தேர்பவனியை தொடங்கி வைக்கிறார்.
விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ் மற்றும் உதவி பங்குதந்தையர்கள் செய்து உள்ளனர்.