ஆன்மிகம்
பெசன்ட்நகர் புனித வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-08-30 03:26 GMT   |   Update On 2017-08-30 03:26 GMT
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங் கண்ணி மாதா திருத்தலத்தின் 45-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சென்னை பெசன்ட்நகர் புனித வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 45-வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு எம்.அருள்ராஜ் தலைமையில் திரளான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று மாலை 5.45 மணிக்கு நடந்தது.

விழா நடைபெறும் 11 நாட்களும் காலை, மாலையில் திருப்பலி நடைபெற உள்ளது. 7-ந்தேதி காலை 9 மணிக்கு கீழ்ப்பாக்கம் பங்குத்தந்தை நம்பிக்கை நாநன் தலைமையிலும், மதியம் 12 மணிக்கு சாந்தோம் பேராலய அதிபர்-பங்குத்தந்தை லூயிஸ் மத்தியாஸ் தலைமையிலும் நடக்கிறது.

அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு சென்னை- மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் மாதா தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி பெசன்ட்நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பவனி செல்கிறது. 8-ந்தேதி மாதா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தலத்தின் அதிபரும், பங்குதந்தையுமான பி.கே.பிரான்சிஸ் சேவியர் மேற்கொண்டுள்ளார்.

இங்கு பழைய திருத்தல ஆலயத்தை இடித்துவிட்டு, புதிய திருத்தல ஆலயம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News