ஆன்மிகம்
புனித அல்போன்சா ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.

நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழாவில் தேர் பவனி

Published On 2017-08-01 03:38 GMT   |   Update On 2017-08-01 03:38 GMT
நாகர்கோவில் ஆயுதப்படை மைதான சாலையில் உள்ள புனித அல்போன்சா ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் ஆயுதப்படை மைதான சாலையில் புனித அல்போன்சா திருத்தலம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது. திருவிழாவின் முதல் நாளில் கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடந்தது. தொடர்ந்து வந்த விழா நாட்களில் மாலை ஜெபம், திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெற்றன.

திருவிழாவின் இறுதி நாளில் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, மறையுரை நடந்தன. மதியம் தேர்ப்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேர்பவனியை தொடர்ந்து அன்பின் விருந்தும், மாலையில் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை அருட்பணியாளர் தாமஸ் பவ்வத்து பரம்பில், துணை பங்குதந்தை அஜீன் ஜோஸ், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News