ஆன்மிகம்
புனித லூர்து அன்னை கெபி திருவிழாவையொட்டி திருப்பலியை பிஷப் ஜூடு பால்ராஜ் நடத்திய போது எடுத்தபடம்.

விக்கிரமசிங்கபுரம் இருதயகுளம் புனித லூர்து அன்னை கெபி திருவிழா

Published On 2017-02-13 03:45 GMT   |   Update On 2017-02-13 03:45 GMT
விக்கிரமசிங்கபுரம் இருதயகுளம் புனித லூர்து அன்னை கெபி திருவிழா நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
விக்கிரமசிங்கபுரம் இருதயகுளம் திரு இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் உள்ள புனித லூர்து அன்னை கெபி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் ஒளி பயணம், தியானம் நடைபெற்றது. அருள்ராஜ், அன்பு தலைமையில் குணமளிக்கும் திருப்பலி, வி.கே.எஸ்.அருள்ராஜ், ஞானபிரகாசம், சகாயராஜ் ஆகியோர் தலைமையில் இல்லறம், துறவறம் குறித்த திருப்பலி, வெள்ளிவிழா, பொன்விழா சிறப்பு திருப்பலி, புனித லூர்து அன்னையின் தேர்பவனி உள்ளிட்டவை நடந்தன.

நேற்று முன்தினம் திரு இருதய உயர்நிலைப்பள்ளியில் இருந்து மெயின்ரோடு வழியாக ஆலயத்திற்கு நற்கருணை பவனி நடைபெற்றது. பின்னர் அருள் அம்புரோஸ் திருப்பலியை நிறைவேற்றி வைத்தார்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் புது நன்மை வழங்கும் விழாவும், விழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. காலை 8 மணிக்கு புனித லூர்து அன்னையின் பெருவிழா நடந்தது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெற்றது.

விழாவில் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை இருதயகுளம் பங்குத்தந்தையும், அம்பை மறை மாவட்ட அதிபருமான ஐ.சைமன் செல்வன், உதவி பங்குத்தந்தை ஜூடு மெரில் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News