ஆன்மிகம்

குருசடி தூய அந்தோணியார் ஆலய திருவிழா 6-ந் தேதி தொடங்குகிறது

Published On 2017-01-04 09:23 IST   |   Update On 2017-01-04 09:23:00 IST
நாகர்கோவில் குருசடி தூய அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
நாகர்கோவில் குருசடியில் கோடி அற்புதர் என அழைக்கப்படும் தூய அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

திருவிழா முதல் நாளில் மாலை கோட்டாறு மறைமாவட்ட நீதித்துறை ஆயர் பதிலாள் அருட்பணியாளர் தார்சியுஸ் ராஜ் தலைமையில் கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடைபெறும். நிகழ்ச்சியில், அருட்பணியாளர் ஜான்சன் மறையுரை நிகழ்த்துகிறார். 7-ந் தேதி அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமையில் நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் மரிய சூசை வின்சென்ட் மறையுரை நிகழ்த்துகிறார்.

8-ந் தேதி காலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் தாமஸ் ஜோன்ஸ் தலைமையில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு நற்கருணைப்பவனியும் நடைபெறும். தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் திருப்பலி, மறையுரை, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

திருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு அருட்பணியாளர் ஜான்குழந்தை தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் செலஸ்டின் மறையுரை நிகழ்த்துகிறார். அன்று காலை 10.30 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கு, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மறையுரை போன்றவை நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும்.

திருவிழா இறுதி நாளான 15-ந் தேதி அதிகாலை 4.45 மணிக்கு முதல்திருப்பலி நடைபெறும். காலை 6.15 மணிக்கு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். இரவு 8 மணிக்கு கொடிஇறக்கம், நற்கருணை ஆசீர், பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.

Similar News