ஆன்மிகம்
தூயமிக்கேல் அதிதூதர் புதிய ஆலய அபிஷேக விழா கோலாகலமாக நடந்தது
கோவை பெரியகடை வீதியில் தூய மிக்கேல் அதிதூதர் புதிய ஆலயத்தின் அபிஷேக விழா, 25 ஆயர்கள் சிறப்பு பிரார்த்தனையுடன் கோலாகலமாக நேற்று நடந்தது.
கோவை பெரியகடை வீதியில் 150 ஆண்டுகள் பழமையான தூய மிக்கேல் அதிதூதர் பேராலயம் உள்ளது. கோவை கத்தோலிக்க கிறிஸ்தவ மறைமாவட்ட பேராலயமான இந்த ஆலயம் மிகவும் பழமையானதால் அதை புதுப்பித்து, புதுமையாக வடிவமைத்து கட்டும் பணி கடந்த 3½ ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த ஆலயம் ரோம்நகரில் உள்ள புனிதபீட்டர் தேவாலய தோற்றத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆலயத்தின் (அபிஷேக விழா) திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் மாலை 4.30 மணிக்கு புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஆயர்கள் தலைமையில், ஆலய பங்கு மக்கள் புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தின் முகப்பு வாயிலுக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள முகப்பு வாயிலை மந்திரித்து புனிதப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் நுழைவு வாயிலை ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் திறந்து வைத்தார். பின்னர் ஆயர்கள், பழைய ஆலயம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில் பலூன்களையும், சமாதானம் மற்றும் அமைதியை வலியுறுத்தி புறாக்களையும் பறக்க விட்டனர்.
இதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கொடிமரம் மந்திரிக்கப்பட்டு அதில், தேர்திருவிழாவுக்கான கொடியை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மறைமாவட்ட பேராயர் பிரகாஷ் மல்லவரம்பு கொடியேற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு புதிய பேராலய திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி, புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி அனந்தராயர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவில் முதலில், ஆலய கட்டுமான பணிகளை செய்த, ஏ.வி.கட்டுமான நிறுவன உரிமையாளர் வின்சென்ட் ராஜ், அவரது மகன் என்ஜினீயர் லியோ சர்னி வின்சென்ட்ராஜ் ஆகியோர் புதிய ஆலய சாவியை வழங்க, அதனை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் பெற்றுக்கொண்டு புதிய ஆலயத்தை திறந்து வைத்தார்.
விழாவில் ஊட்டி மறை மாவட்ட ஆயர் பால்ராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் உள்ளிட்ட பல்வேறு மறை மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயர்கள், 200-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் திருப்பலி பூஜை, மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
விழாவில் கோவை மாவட்டம் மற்றும் அருகில் உள்ள திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதையொட்டி கோவை பெரியகடை வீதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.