ஆன்மிகம்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழாவில் கொடியேற்றம் நடந்ததை படத்தில் காணலாம்.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா தொடங்கியது

Published On 2016-12-10 03:30 GMT   |   Update On 2016-12-10 03:30 GMT
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 18-ந் தேதி வரை நடக்கிறது.

விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி நடந்தது. மாலை 5.30 மணிக்கு திருக்கொடி பவனியும், ஜெபமாலையும் நடந்தது. 6 மணிக்கு கொடியேற்றமும், பின்னர் திருப்பலியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு மறை மாவட்ட செயலாளர் பெலிக்ஸ் தலைமை தாங்கினார். சரல் பங்குத் தந்தை உபால்டு மறையுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில், கன்னியாகுமரி பங்குத்தந்தை நசேரன், பங்கு பேரவை துணைத்தலைவர் லியோன், செயலாளர் சேவியர் அமலதாஸ், பொருளாளர் மரிய ஜாண் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் ‘அலங்கார அன்னையே‘ என்ற தலைப்பில் குறுந்தகடு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தூய உபகார மாதா சொரூபம் அறிமுகம் நடந்தது.

17-ந் தேதி இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

10-ம் நாள் திருவிழாவான 18-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர்் திருப்பலி நடக்கிறது.

Similar News