ஆன்மிகம்
கி.பி. 1542 முதல் கி.பி. 1552 வரையுள்ள காலகட்டத்தில் புனித சவேரியார் கோட்டாரில் மறைபணியாற்றினார். அப்போது அவர் கோட்டாரில் தூய ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பினார்.
கி.பி. 1542 முதல் கி.பி. 1552 வரையுள்ள காலகட்டத்தில் புனித சவேரியார் கோட்டாரில் மறைபணியாற்றினார். அப்போது அவர் கோட்டாரில் தூய ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பினார். அந்த ஆலயத்தில் அவர் தனது புனிதம் மிக்க கரங்களால் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.
கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் ஒரு பகுதியில் தூய ஆரோபண மாதா ஆலயம் இன்றும் இருக்கிறது. மக்கள் அந்த ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தின் முன் அமர்ந்து வேண்டுதல் செய்தும், வணக்கம் செலுத்தியும் வருகிறார்கள். புனித சவேரியார் இந்தியாவுக்கு வந்ததின் 450-வது ஆண்டு நினைவாக அவர் கட்டியெழுப்பிய தூய ஆரோபண அன்னை ஆலயத்தில் முழுநேர நற்கருணை ஆராதனை 1-5-1994 அன்று தொடங்கப்பட்டது.
புனிதர்களின் திருப்பண்டம் இடம்பெற்ற பேராலயம் :
கோட்டார் புனித சவேரியார் பேராலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு திகழ்கிறது. 1605-ம் ஆண்டில் மூவொரு இறைவன் ஆலயமானது புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அள்ளித்தருபவர் என்று மக்களால் போற்றப்படும் புனித சவேரியாரின் வாழ்க்கைப் பயணம் திசைமாற காரணமாக இருந்தவர் புனித இஞ்ஞாசியார்.
எனவே புனித சவேரியார் பேராலயத்தில் புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித சவேரியாரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தங்கமுலாம் பூசப்பட்ட பீடப்பகுதி :
கி.பி. 1865-ம் ஆண்டில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் மேற்கு, வடக்கு, தெற்குப் பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் ஆலயம் சிலுவை அடையாளத் தோற்றத்தைப் பெற்றது. கி.பி. 1876-ம் ஆண்டில் ஆலய பீடம் அழகிய மரத்தால் வடிவமைக்கப் பட்டது. மரத்தால் செய்யப்பட்ட புனித சவேரியார் சொரூபம் கோவாவில் இருந்து கொண்டுவரப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது.
கொல்லம் மறைமாவட்டத்தில் இருந்து 30-5-1930-ல் கோட்டார் தனி மறைமாவட்டமாகப் பிரிக்கப்பட்டபோது கோட்டார் ஆலயம் மறைமாவட்ட பேராலயமாக உயர்த்தப்பட்டது. புனித சவேரியார் இந்தியாவுக்கு வருகை புரிந்ததின் 400-வது ஆண்டு நினைவாக கி.பி.1956-ல் கோபுரம் கட்டப்பட்டு அதன்மேல் புனித சவேரியாரின் சொரூபம் நிறுவப்பட்டது. 29-10-2009 அன்று கோவில் முன் வெண்கலத்தால் ஆன கொடிமரம் நிறுவப்பட்டது. ஆலய திருப்பீடம் 29-10-2010 அன்று புதுப்பிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் மரத்தாலான பீடப்பகுதி தங்கமுலாம் பூசப்பட்டதாகும்.
தூய லூர்து அன்னை கெபி :
புனித சவேரியார் பேராலயம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டபோது தூய ஆரோபண அன்னை ஆலயம் பேராலயத்தோடு இணைக்கப்பட்டது. பேராலய வடக்குப்பகுதியில் தூய லூர்து அன்னை கெபி அழகுற கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் 2-வது சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு லூர்து அன்னை கெபியின் முன் செபமாலை, சிறப்பு நற்கருணை ஆசீர் வழிபாடு நடைபெறுகிறது.
8-9-2014 அன்று புதுப்பிக்கப்பட்ட தூய லூர்து அன்னை கெபி மந்திரிக்கப்பட்டது.
திருவிழா தேர்ப்பவனியில் 4 தேர்கள் :
கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடையும். இதில் 10-வது நாள் திருவிழா அன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 8-ம் நாள் திருவிழா அன்றும், 9 மற்றும் 10-ம் நாள் திருவிழா அன்றும் தேர்ப்பவனி நடைபெறும்.
8-ம் நாள் திருவிழா அன்று காவல் தூதர் தேர், புனித செபஸ்தியார் தேர், புனித சவேரியார் தேர் ஆகிய 3 தேர்கள் மட்டும் செல்லும். 9-ம் நாள் திருவிழா மற்றும் 10-ம் நாள் திருவிழா நாட்களில் காவல் தூதர் தேர், புனித செபஸ்தியார் தேர், புனித சவேரியார் தேர், தூய மாதா தேர் ஆகிய 4 தேர்கள் இடம்பெறும். இந்த தேர்ப்பவனியின்போது பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தும், தரையில் உருண்டு வேண்டுதல் செய்து நேர்ச்சை நிறைவேற்றுவது இத்திருவிழாவின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
அழியாத உடல் :
அவரது புனித உடல் பல மாதங்களுக்குப் பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து, இறைஊழியம் செய்து பெரும்சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.