ஆன்மிகம்
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லை மாவட்டம் திசையன்விளை உலக ரட்சகர் ஆலய 134-வது ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை உலக ரட்சகர் ஆலய 134-வது ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்றி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர். முன்னதாக திருப்பவனியும், திருப்பலியும் நடந்தது. திருவிழா வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை திருப்பவனி, திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
8-ந் திருநாளான 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை நகர வீதிகளில் நற்கருணை பவனி நடக்கிறது. 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்று மாலை புதிதாக கட்டப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து பெருவிழா திருப்பலியை நடத்தி வைக்கிறார். 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலையில் நகர வீதிகளில் சப்பர பவனியும், இரவில் நற்கருணை ஆசீரும் நடக்கிறது.