ஆன்மிகம்
கல்லறை தோட்டத்தில் பெண்கள் தங்களது உறவினர் சமாதியில் அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்த காட்சி.

கல்லறை திருநாளில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி

Published On 2017-11-03 09:28 IST   |   Update On 2017-11-03 09:28:00 IST
கல்லறை திருநாளையொட்டி மறைந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
உலகம் முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 2-ந் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்த இறந்தவர்களின் கல்லறைக்கு சென்று மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்துவார்கள்.

கல்லறை திருநாள் அனைத்து ஆன்மாக்கள் நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நேற்று கல்லறை திருநாளையொட்டி சிவ்ரியில் உள்ள கல்லறை தோட்டத்தில் திரளான தமிழ் கிறிஸ்தவர்கள் மறைந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கல்லறையை மலர்களால் அலங்கரித்து, மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும், மெழுவர்த்தி, ஊதுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். மேலும் மனம் உருகி பிரார்த்தனையும் செய்தனர்.

இதேபோல கல்லறை திருநாளையொட்டி மும்பை, தானே, நவிமும்பையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News