ஆன்மிகம்
தூய ரபேல் அதிதூதர் ஆலய தேர் பவனி
செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம் தூய ரபேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம் தூய ரபேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை ஆகியன நடந்தன. 9-ம் திருநாளன்று தேர் பவனி நடந்தது.
உடையார்பட்டி பங்குத்தந்தை ஜோமிக்ஸ், பாளையங்கோட்டை ஆயர் இல்ல பங்குத்தந்தை ராபின், அகரகட்டு பங்குத்தந்தை செல்வராஜ், கடையம் பங்குத்தந்தை மனோ, செங்கோட்டை பங்குத்தந்தை பிளேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த தேர் பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை வல்லம் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் ஊர் பொறுப்பாளர்களும், இறை மக்களும் செய்திருந்தனர்.