ஆன்மிகம்
தென்தமிழகத்தின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் அணைக்கரை மாதா ஆலய திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

9-ம் திருவிழாவான இன்று(வியாழக்கிழமை) மாலை ஆராதனையில் தூத்துக்குடி ஆயர் இவோன் அம்புரோஸ் கலந்துகொள்கிறார். கூத்தன்குழி சலேசியன் சபை அதிபர் கஸ்மீர் மறையுரையாற்றுகிறார். நள்ளிரவு 12 மணிக்கு மாதா தேர்பவனி நடைபெறுகிது. தொடர்ந்து மல்பின் சூசை தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. நாளை(வெள்ளிக்கிழமை) காலை பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலை 4 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.
9-ம்தேதி மாலை 6 மணிக்கு திருப்பலியும், இரவு அசனவிருந்தும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர், அருட்சகோதரிகள், பங்குமேய்ப்பு பணிக்குழு, அன்பியங்கள், மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.