ஆன்மிகம்

முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2017-08-31 11:54 IST   |   Update On 2017-08-31 11:54:00 IST
முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் திருப்பலியுடன் தொடங்குகிறது. இதற்கு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்குகிறார். பங்குத்தந்தை டோமினிக் கடாட்ச தாஸ் முன்னிலை வகிக்கிறார்.

3-ம் நாள் திருவிழாவில், காலை 9 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு குழித்துறை மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமை தாங்குகிறார். வட்டம் பங்குத்தந்தை சகாயதாஸ் மறையுரையாற்றுகிறார். அதனைத்தொடர்ந்து அன்பு விருந்து நடைபெறுகிறது.

6-ம் நாள் திருவிழாவில் மாலை 6.30 மணிக்கு சகாய மாதா அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவில் மாலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

9-ம் நாள் திருவிழா அன்று காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறைமாவட்ட முதன்மை பணியாளர் மரிய அல்போன்ஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணி ஸ்டீபன் மறையுரை ஆற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். அதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது.

10-ம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலி காலை 9 மணிக்கு நடக்கிறது. 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை டோமினிக் கடாட்ச தாஸ், இணை பங்குத்தந்தை விக்டர் ஆன்றனி, ஆன்மிக தந்தை ஆன்றனி, பங்கு பேரவை துணைத்தலைவர் வின்சென்ட் ராஜ், செயலர் மரியஜாண்சன், இணை செயலர் மரிய ஜாண் வரதராஜன், பொருளாளர் டெய்சி ராணி, மற்றும் பங்கு மக்கள், பக்த சபையினர், இயக்கத்தினர் செய்து வருகிறார்கள்.

Similar News