ஆன்மிகம்
வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது
வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தென்னகத்து வேளாங் கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் நாள் மாலை 6 மணிக்கு தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ்பயஸ் தலைமையில் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. முக்கிய விழாவாக செப்டம்பர் 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்புப்பெருவிழா, இறைவார்த்தை சபை 142-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று ஏசுவின் அருமருந்து 17-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது.
அன்று மாலையில் நற்கருணை ஆராதனை, முப்பெரும் விழா மற்றும் கூட்டுத்திருப்பலியை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி நடத்துகிறார்.
அன்று இரவு 7 மணியளவில் வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் பவனி நடக்கிறது.
9-ந்தேதி காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவுபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை திருத்தல நிர்வாகி ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், உதவி பங்குதந்தை அமலநாதன் அடிகளார், ஆன்மிக குரு அகஸ்டின்காரமல் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.