ஆன்மிகம்

உலக மீட்பர் பசிலிக்கா சகாயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றம்

Published On 2017-07-22 09:41 IST   |   Update On 2017-07-22 09:41:00 IST
திருச்சி பாலக்கரையில் பிரசித்தி பெற்ற உலக மீட்பர் பசிலிக்கா சகாயமாதா ஆலயம் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி பாலக்கரையில் பிரசித்தி பெற்ற உலக மீட்பர் பசிலிக்கா சகாயமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வரகனேரி தூய சவேரியார் ஆலயத்தில் திருக்கொடி புனிதப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் உலக மீட்பர் பசிலிக்கா ஆலயத்திற்கு பவனியாக திருக்கொடி ‘கொண்டு வரப்பட்டது.

பின்னர் கொடியேற்றம் நடந்தது. இதில் திருத்தல பங்கு தந்தை அமல்ராஜ், உதவி பங்கு தந்தை மரியசூசை உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. அதன் பின்னர் ‘ அன்னை மரியாள் மீட்பின் முதல் கனி’ என்ற தலைப்பில், பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.

வருகிற 30-ந்தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து தேர் பவனி, செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. அதைத்தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது.

Similar News