ஆன்மிகம்

எல்லீஸ்நகர் தூய செபஸ்தியார் ஆலய தேர்பவனி

Published On 2017-01-26 10:28 IST   |   Update On 2017-01-26 10:28:00 IST
மதுரை நியூ எல்லீஸ்நகரில் உள்ள தூய செபஸ்தியார் ஆலயத்தின் 29-ம் ஆண்டு விழா நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாலையில், தூய செபஸ்தியார் சப்பரத்தில் வீதி உலா வந்தார்.
மதுரை நியூ எல்லீஸ்நகரில் உள்ள தூய செபஸ்தியார் ஆலயத்தின் 29-ம் ஆண்டு விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பங்குத் தந்தை அருள்ராயன் தலைமையில் திருப்பலி நடந்தது. அருட்பணி அற்புதசாமி மறையுரை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து மாலையில், தூய செபஸ்தியார் சப்பரத்தில் வீதி உலா வந்தார். இந்த சப்பரமானது தாமஸ்காலனி, எஸ்.எஸ்.காலனி, அன்சாரிநகர், வைத்தியநாதபுரம் வழியாக பவனி வந்தது.

விழாவின் தொடர்ச்சியாக, இன்று காலை 10 மணிக்கு கூழ் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் வேட்டி- சேலை வழங்கும் விழாவும், நோட்டு புத்தகம் வழங்கும் விழாவும் நடக்கிறது.

Similar News