ஆன்மிகம்

மெய்யூர் தூய யோவான் ஆலய பிரதிஷ்டை விழா

Published On 2017-01-25 13:51 IST   |   Update On 2017-01-25 13:51:00 IST
உடன்குடி அருகே உள்ள மெய்யூர் தூய யோவான் ஆலயத்தின் 59-வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விருந்து விழா கடந்த கர்த்தரின் பாதம் ஊழியர் ராபர்ட் ஜெபசிங் கன்வென்சன் கூட்டத்துடன் தொடங்கியது.

உடன்குடி அருகே உள்ள மெய்யூர் தூய யோவான் ஆலயத்தின் 59-வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விருந்து விழா கடந்த கர்த்தரின் பாதம் ஊழியர் ராபர்ட் ஜெபசிங் கன்வென்சன் கூட்டத்துடன் தொடங்கியது. கடந்த 20-ம் தேதி மாலை 7 மணிக்கு விளாத்திகுளம் தூய பவுல் பஜனை துதி ஆராதனையில் நவமணி டைட்டஸ் சிறப்பு கிறிஸ்தவ செய்தி கொடுத்தார்.

21-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 59-வது பிரதிஷ்டை ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. இதில் சபை மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். அன்று மாலை 4 மணிக்கு வேதாகம தேர்வு, 5 மணிக்கு விளையாட்டு விழா, இரவு 7 மணிக்கு ஜாபிக் ஐசக் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது.

22-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை 3 மணிக்கு ஞாயிறு ஆராதனை, தொடாந்து பிள்ளையான்மனை சேகரகுரு ஜேஸ்பர் சிறப்பு கிறிஸ்தவ நற்செய்தி கொடுத்தார்.பின்னர் அன்று மாலை 5 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு அசன விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சி ஸ்தோத்திர ஆராதனையும் நடந்தது

பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகளை சேகர குருவானவர் ஜெயசிங்,சபை ஊழியர் ஜெபத்துரை மற்றும் மெய்யூர் சபை மக்கள் செய்திருந்தனர்.

Similar News