ஆன்மிகம்

பொழிக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-01-25 11:05 IST   |   Update On 2017-01-25 11:05:00 IST
பொழிக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பொழிக்கரையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 13 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை 3.45 மணிக்கு நடந்த ஆடம்பரக்கூட்டுத்திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி, அருளுரை வழங்கி கொடியேற்றி வைத்தார்.

இன்று மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு இறை இரக்கத் திருப்பலி நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ் மாலையும், 6.30 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. 29-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி அருட்பணியாளர் ஆன்டனி அல்காந்தர் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் நெல்சன் அருளுரை வழங்குகிறார். 30-ந்தேதி இரவு 8 மணிக்கு அன்பிய ஒருங்கிணைய பொதுகூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

4-2-17 அன்று மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலையும், இரவு 7 மணிக்கு மாலை ஆராதனையும் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் ஜான் போஸ்கோ தலைமை தாங்குகிறார். கன்னியாகுமரி வட்டார முதன்மை பணியாளர் நசரேன் அருளுரை வழங்குகிறார். இரவு 9 மணிக்கு புனிதரின் திருவுருவ சப்பரப்பவனி நடக்கிறது.

5-ந்தேதி காலை 5.30 மணிக்கு தேர் திருப்பலிக்கு அருட்பணியாளர் தனிஸ்லாஸ் தலைமை தாங்கி அருளுரை வழங்குகிறார். 8 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி முட்டம் வட்டார முதன்மை பணியாளர் பஸ்காலிஸ் தலைமையில் நடக்கிறது. கேசவன் புத்தன்துறை பங்கு தந்தை சாம் எப்.மேத்யூ அருளுரை வழங்குகிறார். 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கமும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் சகாய ஆனந்த் தலைமை தாங்கி, அருளுரை வழங்குகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், வளர்ச்சிக்குழு, பங்கு அருட்பணி பேரவை, பங்கு தந்தை நிக்சன் ஆகியோர் இணைந்து செய்து வருகிறார்கள்.

Similar News