ஆன்மிகம்

ஊத்துமலைதூய அருளப்பர் ஆலய திருவிழா

Published On 2017-01-22 10:58 IST   |   Update On 2017-01-22 10:58:00 IST
ஆலங்குளம் அருகே ஊத்துமலையில் உள்ள தூய அருளப்பர் ஆலய திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விழா நடக்கிறது.
ஆலங்குளம் அருகே ஊத்துமலையில் உள்ள தூய அருளப்பர் ஆலய திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலி நடக்கிறது. 27-ந் தேதி நற்கருணை பவனி நிகழ்ச்சியும், 28-ந் தேதி தேர் பவனியும் நடக்கிறது.

29-ந் தேதி காலை திருவிழா திருப்பலி, புதுநன்மை, தேர் பவனி மற்றும் மாலையில் கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியனவும், அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. மாதத்தின் கடைசி சனிக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு கெபியில் திருப்பலி லூர்து மாதாவின் நவநாள் மன்றாட்டு நிகழ்ச்சியும், அசன விருந்தும் நடக்கிறது.

Similar News