ஆன்மிகம்

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய திருவிழா

Published On 2017-01-03 14:25 IST   |   Update On 2017-01-03 14:25:00 IST
காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய நிறைவு நாளில் புனித முடியப்பர் பெருவிழா, உறுதி பூசுதல் மற்றும் நற்கருணை அருட்சாதனங்கள் வழங்கும் விழா ஆகியவை நடந்தன.
காயல்பட்டினம் கொம்புத்துறையில் புனித சவேரியாரால் கட்டப்பட்ட புனித முடியப்பர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.

விழா நாட்களில் திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை ஆகியவை நடந்தன. 2-வது நாளில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவும், 9-வது நாளான புத்தாண்டு தினத்தில் இறைவனின் தாய் மரியாளின் பெருவிழாவும் கொண்டாடப்பட்டது. நிறைவு நாளில் புனித முடியப்பர் பெருவிழா, உறுதி பூசுதல் மற்றும் நற்கருணை அருட்சாதனங்கள் வழங்கும் விழா ஆகியவை நடந்தன.

இந்நிகழ்ச்சிகளில் பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ்பங்கேற்று ஆசி வழங்கினார். பின்னர் ஆறுமுகநேரி, ஆலந்தலை அமலிநகர், வீரபாண்டியன்பட்டினம், புன்னக்காயல், பழையகாயல், குரும்பூர், ஏரல், தூத்துக்குடி, ஜீவாநகர், சிங்கித்துறை ஆகிய பகுதி மக்கள் பங்கேற்க திருப்பலி நிகழ்ச்சிகள் தனித்தனியாக நடந்தன. இவற்றை பங்கு தந்தையர்களான ஸ்டார்வின், சேவியர் ஜார்ஜ், அமல்ராஜ், உபர்ட்டஸ், சகாய ராயன், கிஷோக், சந்தியாகு, ஆண்ட்ரூ டிரோஸ், சில்வெஸ்டர், வில்சன், ஜெகதீஷ், சகேஸ் ஆகியோர் நடத்தினர்.

விழாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கொம்புத்துறை பங்கு தந்தை மரிய ஜாண் கோஸ்தா மற்றும் ஊர் நலக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

Similar News