ஆன்மிகம்

கோலார் தங்கவயல் பெத்தேல் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2017-01-02 09:17 IST   |   Update On 2017-01-02 09:17:00 IST
கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை இருதயபுரத்தில் உள்ள பெத்தேல் ஆலயத்தில் நேற்று முன்தினம் 10.30 மணி முதல் நேற்று அதிகாலை 1.30 மணி வரை 3 மணி நேரம் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
உலகம் முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை இருதயபுரத்தில் உள்ள பெத்தேல் ஆலயத்தில் நேற்று முன்தினம் 10.30 மணி முதல் நேற்று அதிகாலை 1.30 மணி வரை 3 மணி நேரம் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், ஆலயத்தின் போதகர் காட்பெர்க் ஜான் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

அப்போது, இந்திய நாட்டின் நலனுக்காகவும், கர்நாடக மாநிலம் முன்னேற்றம் அடையவும், கோலார் தங்கவயலின் வளர்ச்சி பெறவும், முன்னாள் தங்கச்சுரங்க தொழிலாளர்கள், பி.இ.எம்.எல். தொழிலாளர்கள் நலனுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

நள்ளிரவு 12 மணி அளவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆலயத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். அதேபோல நேற்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை காட்பெர்க் ஜான் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். புத்தாண்டையொட்டி பெத்தேல் ஆலயத்தில் பெஞ்சமின் தலைமையில் இன்னிசை கச்சேரி நடந்தது.

Similar News