ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி
பூண்டி மாதா பேராலயத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பிரசித்திப் பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்றான பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைசாமி, உதவி பங்கு தந்தையர்கள் சூசை, சதீஸ்ஏசுதாஸ், ஆன்மிக தந்தையர்கள் மாசிலாமணி, அருளானந்தம் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
அதைதொடர்ந்து குழந்தை ஏசு சொரூபம் கிறிஸ்துமஸ் குடிலில் வைக்கப்பட்டு புனிதம் செய்யப்பட்டது. இதேபோல் மைக்கேல்பட்டி, பூதலூர், கோட்டரப்பட்டி, முத்தாண்டிப்பட்டி, மணத்திடல் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.