ஆன்மிகம்

கல்லக்குடியில் சவேரியார் ஆலய ஆடம்பர சப்பர பவனி

Published On 2016-12-03 11:26 IST   |   Update On 2016-12-03 11:26:00 IST
திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் புனித சவேரியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர சப்பர பவனி நேற்று நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி, பங்கு தந்தையர்கள் தலைமையில் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர சப்பர பவனி நேற்று நடைபெற்றது.

இதில் சப்பரத்தை பூண்டி பேராலய அதிபர் பாக்கியசாமி புனிதபடுத்தியதும், டால்மியா செயல் இயக்குனர் கிருஷ்ணகுமார் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் சவேரியார், மிக்கேல் சம்மனசு, ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய 3 சப்பரங்கள் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து ஆலயத்தை அடைந்தது.

விழாவில் புள்ளம்பாடி சகாயமாதா ஆலய பங்குத்தந்தை கஸ்பர், டால்மியா சிமெண்டு ஆலை அதிகாரிகள் மேத்யூ, ஆன்சிகுரியன் மற்றும் கல்லக்குடி, மேலரசூர், வடுகர்பேட்டை, முதுவத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இன்று(சனிக்கிழமை) காலை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா திருப்பலியும், உலக அமைதி வேண்டி மாரத்தான் ஓட்ட பந்தயமும், அன்னதானமும், பின்னர் திவ்ய நற்கருணையும் நடைபெற உள்ளது. திரு விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அடைக்கலராஜ், அருட்சகோதரிகள் கிராம பட்டையதார்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Similar News