ஆன்மிகம்

திருச்சி புனித சவேரியார் ஆலய தேர்பவனி நாளை நடக்கிறது

Published On 2016-12-02 10:18 IST   |   Update On 2016-12-02 10:18:00 IST
திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அல்லித்துறையில் புனித சவேரியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அல்லித்துறையில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழறிஞர் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. ஆண்டு தோறும் இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலியும், பக்தர்களின் வேண்டுதல் சப்பர சுற்றுப்பிரகாரம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று இரவு 8 மணியளவில் மலர்களாலும், மின் அலங்காரத்தாலும் அலங்கரிப்பட்ட தேரில் புனித சவேரியார் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக பவனி வருகிறார்.

திருவிழாவின் நிறைவு விழாவான 4-ந்தேதி காலை ஆடம்பர கூட்டுப்பாடலும், திருப்பலியும், இரவு நற்கருணை ஆசீருடன், கொடியிறக்கமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் மற்றும் ஆலய விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Similar News