ஆன்மிகம்

இன்று கல்லறை திருவிழா: கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு பிரார்த்தனை

Published On 2016-11-02 16:14 IST   |   Update On 2016-11-02 16:14:00 IST
இன்று கல்லறை திருவிழாவை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
கத்தோலிக்க திருச்சபை சார்பில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதி கல்லறை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி இன்று (புதன்கிழமை) ஈரோடு சத்தி ரோடு மணிக்கூண்டு செல்லும் வழியில் உள்ள கல்லறையில் கிறிஸ்தவர்கள் இறந்தவர்களின் கல்லறைகள் சுத்தம் செய்து மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இறந்தவர்களை நினைவு கூர்ந்தும் ஆன்மா சாந்தி அடையவும் இந்த பிரார்த்தனை நடத்தப்படுகிறது.

இதே போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ கல்லறைகளிலும் இன்று ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து கல்லறைகளை சுத்தம் செய்து மெழுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

புனித அமல அன்னை பங்குதந்தை அருண் தலைமையில் அருள், முத்து, பிலிப் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இறந்தவர்களை நினைவு கூர்ந்து சிறப்பு பிரார்தனை செய்தனர்.

Similar News