ஆன்மிகம்

இன்று கல்லறை திருநாள்: கிறிஸ்தவர்கள் மலர்கள் வைத்து வழிபாடு

Published On 2016-11-02 15:04 IST   |   Update On 2016-11-02 15:04:00 IST
இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் மலர்கள் வைத்து வழிபாடு செய்வதனர்.
கிறிஸ்தவர்கள் தங்களது இறந்த முன்னோர்களின் நினைவு கூறும் வகையில் கல்லறை தினமாக ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதி கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் இந்த ஆண்டு கல்லறை திருநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி புதுவையில் உப்பளம், முத்தியால்பேட்டை, உழவர்கரை, வில்லியனூர், அரியாங்குப்பம், ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறைகளில் வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

கல்லறை தினத்தையொட்டி பெங்களூர், ஊட்டி மற்றும் தமிழக பகுதியில் இருந்து பட்ரோஸ், ஜெர்புரா, மினி ரோஸ், சாமந்தி, ரோஜா, உள்ளிட்ட பல வகையான வண்ணப்பூக்கள் வரவழைக்கப்பட்டன.

இவை கல்லறை தோட்டம் அருகிலும், பெரிய மார்க்கெட், பூக்கடை மற்றும் மி‌ஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயம் உள்ளிட்ட இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டன.

Similar News