கிரிக்கெட்
null

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அரைசதம் அடித்து கவுரவமான ஸ்கோருக்காக போராடும் ரகானே

Published On 2023-06-09 10:33 GMT   |   Update On 2023-06-09 11:46 GMT
  • கே.எஸ். பரத் இன்று ரன்ஏதும் எடுக்காமல் அவுட்
  • கம்மின்ஸ் பந்தில பவுண்டரி, சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்தார்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 38 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 29 ரன்களுடனும், கே.எஸ். பரத் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எஸ். பரத் ரன்ஏதும் எடுக்காமல் நேற்றைய ரன்னுடன் போலண்ட் பந்து வீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். ஷர்துல் தாகூர் உடலில் அடி வாங்கினாலும் ஆட்டமிழக்காமல் தடுத்து ஆடினார்.

மறுமுனையில் ரகானே நம்பிக்கையுடன் விளையாடினார். 46-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரகானே, கடைசி பந்தில் சிக்சர் அடித்து அரரைசதம் அடித்தார்.

92 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். தற்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

Tags:    

Similar News