கிரிக்கெட் (Cricket)

ரன் மழை பொழிந்த கோலி, ஷ்ரேயஸ்.. நியூசிலாந்துக்கு 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2023-11-15 17:53 IST   |   Update On 2023-11-15 17:53:00 IST
  • விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.
  • நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார். 

ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Tags:    

Similar News