கிரிக்கெட்

68 ரன்கள் எடுத்த டாஸ்மின் பிரிட்ஸ்

மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதி: 165 ரன் இலக்கை துரத்தும் இங்கிலாந்து

Published On 2023-02-24 15:34 GMT   |   Update On 2023-02-24 15:34 GMT
  • இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது.
  • தென் ஆப்பிரிக்காவின் லாரா வல்வார்ட் 53 ரன்களும், டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்களும் எடுத்தனர்.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இதில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது, டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் லாரா வல்வார்ட் 53 ரன்களும், டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. 11 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக ஆடிய சோபியா 28 ரன்னிலும், டேனி வியாட் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலைஸ் கேப்சி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் நாட் ஷிவர் பிரன்ட், கேப்டன் ஹீதர் நைட் நிதானமாக ஆடினர்.

Tags:    

Similar News