கிரிக்கெட்

ஆட்ட நாயகி விருது வென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ்

மகளிர் ஆசிய கோப்பை - ஜெமிமா அதிரடியில் யுஏஇயை வீழ்த்தியது இந்திய அணி

Update: 2022-10-04 21:19 GMT
  • இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா அரை சதமடித்தனர்.
  • ஐக்கிய அரபு அமீரக அணியை 104 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

சில்ஹெட்:

மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தியது.

இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 178 ரன்களை குவித்தது. பொறுப்புடன் ஆடிய தீப்தி ஷர்மா அரைசதம் அடித்தார். அவர் 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 64 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், 45 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவித்தார்.

இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. 20 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதனால் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

Similar News